முக்கிய செய்திகள்

Saturday, October 25, 2008

இலங்கைத்தமிழ் மக்களுக்கு என்றும் என்னுடைய ஆதரவு இருக்கும்: அர்ஜுன்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர் என செய்தி வெளிவந்திருந்தது.

எனினும் அந்த செய்தியடுத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கொந்தளிப்பையடுத்தே இன்று அஜித் உனடியாக சில செய்தியூடகங்களுக்கு தான் அந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொள்வேன் என்ற தகவலை வழங்கியிருந்தார்.

அதே நேரம் அர்ஜுன் தமிழ்வின் இணையத்தளத்தை நேரடியாக மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த 23 வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் தமிழை மிகவும் நேசிப்பதாகவும் இப்படிபட்ட கருத்தை தான் மனதில் கூட நினைந்தது கிடையாது என்றும் குறிப்பாக இலங்கை தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தன்னுடைய ஆதரவு என்றும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் நேற்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியான செய்தில் வந்த கருத்தை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி-www.tamilwin.com

0 comments:

  © Blogger template Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP