முக்கிய செய்திகள்

Saturday, October 25, 2008

ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் நிச்சயம் கலந்துகொள்வேன் - அஜீத் பேட்டி

ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில்
நிச்சயம் கலந்துகொள்வேன் - அஜீத் பேட்டி


ழத்தமிழர்களுக்கு ஆதரவாக வரும் நவம்பர்1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்கள் அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர். இந்த செய்தி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியான சில மணிநேரங்களிலேயே உலகத்தமிழர்கள் கொந்தளித்து விட்டனர்.

ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருவருக்கு எதிராகவும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று கொந்தளித்த ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிலவற்றிலும் இறங்கினர். சில இடங்களில் கல்வீச்சு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி இன்று(25 அக்டோபர்) பாரீஸ் நகரில் ஏகன் திரைப்படத்தை வெளியிடமுடியாத சூழல் உண்டாகியுள்ளது.

இந்த நிலையில் நக்கீரனை தொடர்புகொண்ட நடிகர் அஜீத், ஈழத்தமிழர்களுக்கான உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் கண்டிப்பாக கலந்துகொள்வதாக கூறினார்.

“ நடிகர் சங்கம் எடுத்துள்ள உண்ணாவிரத போராட்ட முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனவே கட்டாயம் சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் கலந்துகொள்வேன். ஈழத்தில் அப்பாவித்தமிழர்கள் தாக்கப்படுவதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிப்பேன்” என நம்மிடம் உறுதி கூறினார் அஜீத். உண்ணாவிரத போராட்டம் பற்றி தான் சொன்ன கருத்தை திரை உலகில் இருக்கிற ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டனர் என்கிறது அஜீத் தரப்பு.

நடிகர் அர்ஜீனும் நடிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

Source: Nakkeran ( Dated 25 October 2008)

0 comments:

  © Blogger template Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP