ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்கமாட்டோம்: அடித்தார் பல்டி முதல்வர் கருணாநிதி
![]() |
கூறினார்.தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு விதித்துள்ள கெடு முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், முதல்வரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, மத்திய ஆட்சிக்கு மேலும் சிக்கலை உருவாக்கும் வகையில் தமிழக எம்.பி.க்கள் இராஜிநாமா செய்துவிடக் கூடாது என முதல்வரைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். அதை முதல்வர் ஏற்றுக் கொண்டதாகவும் பிரணாப் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், மத்திய ஆட்சியை வேதனைக்கு உள்ளாக்கும் சிக்கலை உருவாக்க மாட்டோம் என்றும் இதுபற்றி அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்வோம் என்றும் கூறினார். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கடந்த 14-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்தக் கெடு அக்டோபர் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏற்கெனவே தங்கள் பதவி விலகல் கடிதங்களை முதல்வரிடம் கொடுத்துவிட்டனர். 28-ம் தேதி முடிந்தவுடன், இது குறித்து அனைத்துக் கட்சியினர் என்ன முடிவெடுக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் தர வேண்டியிருக்கும். ஏற்கெனவே இதுதொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி தருவதாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை வீண்போகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததால்தான் இலங்கையில் குடிபெயர்ந்த தமிழ்க் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் உணவுப் பொருட்கள் தரப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார். இப்போது எடுக்கப்படும் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்க அவகாசம் தரும் வகையில் பதவி விலகலை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா தகவல்: முன்னதாக பகல் 12 மணி அளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பிரணாப் முகர்ஜியின் வருகை பற்றி தெரிவித்தார். |
0 comments:
Post a Comment