முக்கிய செய்திகள்

Sunday, October 26, 2008

தலைவர்களின் தீபாவளி செய்திகள்...

பிரதமர்- இந்த நாள்..நல்ல நாள்..எல்லா மாநிலங்களும் இப் பண்டிகையைக் கொண்டாடுவதால்..என் காதுகளுக்கு இன்று எந்த பிரச்னையும் வராது..நாளை..எந்த மாநில முதல்வர் எந்த பிரச்னையை எழுப்புவார்னு தெரியலை...நீங்க என்ன கேட்டீங்க..தீபாவளி செய்தியா...நான் இதுவரை இந்த விஷயமாக சோனியாஜி யிடம் பேசவில்லை..அவர் இதில் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் என் முடிவும்..செய்தியும்...

கலைஞர்-உடன்பிறப்பே..இன்று காலை தொலைபேசியில் பிரதமரிடம் பேசினேன்..நரகாசூரனிடம் மக்கள் பட்ட அன்னலை..நாத்தழுதழுக்க கேட்டார்...அவரது இந்த உணர்ச்சி கண்டு..நான் மெய்சிலிர்த்தேன்..39 ஆண்டுகளாக அண்ணா என் கனவில் வந்து..தம்பி..நீ வாளாயிருக்கிறாயே..என கேட்டுக்கொண்டிருந்தார்..இன்று பிரதமரின்..எண்ண அலைகள்..பார்க்கும் போது அண்ணாவின் மனதில் தைத்திருந்த முள் எடுக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.

ராமதாஸ்-என் நிலைபாடு குறித்து..பலரும்..பலவும்..பேசிக்கொண்டிருக்கிறார்கள்..எது..எப்படி இருந்தாலும்..காங்கிரஸ் உடன் கூட்டணி உண்டு..அன்புமணிக்கு ..மத்திய அமைச்சர் பதவி உண்டு.2011ல் பா.ம.க.ஆட்சி தமிழகத்தில் மலரும்.

ஜெயலலிதா- நரகாசூரன் போன்ற ..வன்முறை சக்திகளை..என் ஆட்சியில் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவள் நான்..ஆனால்..கருணாநிதி ஆட்சியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.வரும் 28ம் தேதி ..கலைராஜன் தலைமையில் எஸ்,வீ.சேகர் வீட்டு முன்..இதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ப.சிதம்பரம்-நாட்டில் பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது..அடுத்த தீபாவளிக்குள் ஒற்றை இலக்கிற்கு வந்துவிடும்...ஆகவே பங்குசந்தை சீர்பட்டுவிடும்..பயம் வேண்டாம்.

ஆற்காடு வீராசாமி-தீபம்+ஒளி..அதுதான் தீபாவளி.ஆகவே மக்கள் ஒளிக்கு மின்சாரத்தை நம்பாமல்..தீபங்களை ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்..அதனால்தான்..கலைஞர் பாமாயில் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்துள்ளார்.

பர்னாலா--இதுபோல சமயங்களில் வாழ்த்துக்கள் சொல்வதுதான் என் வேலை..என எனக்கு நன்கு தேரியும்..ஆகவே ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லி முடிந்ததுமே..தீபாவளி வாழ்த்து எழுதிவிட்டேன் (என்றபடி 100பக்கங்கள் எழுதிய புத்தகத்தை கொடுக்கிறார்)

ரஜினி-வாழ்த்து கேட்டு..என்னை யாரும்..கட்டாயப்படுத்த முடியாது..அதே நேரம்..நான் வாழ்த்து சொன்னால்..அதை யாரும் தடுக்க முடியாது..அப்போது ரசிகர்களை அழைத்துக்கொள்வேன்.

(நமது சரடு நிருபருக்கு அளித்த பேட்டி)

0 comments:

  © Blogger template Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP